/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நுாற்பாலையில் தீ; இயந்திரங்கள் சேதம்
/
நுாற்பாலையில் தீ; இயந்திரங்கள் சேதம்
ADDED : மார் 05, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் சாலையில் டி.பி.எஸ்., ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மாலை வழக்கம்போல ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென பஞ்சு குடோனை ஒட்டியிருந்த பகுதியில் கரும்புகை வெளியேறியது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சிலும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.