ADDED : நவ 16, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
கோபி:நம்பியூர்
அருகே முதலியார் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 60; பேக்கரி கடை
உரிமையாளர்; மனைவி மல்லிகாவுடன் நேற்று வழக்கம்போல் கடைக்கு
சென்றார்.
அவர் வசிக்கும் ஓட்டு வீட்டில் இருந்து காலை, 7:30 மணிக்கு
கரும்புகையுடன் தீ எரிந்தது. நம்பியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு
மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் டி.வி., கட்டில், மெத்தை,
தட்டுமுட்டு சாமான்கள், துணிமணி எரிந்து நாசமானது. விபத்துக்கான
காரணம் தெரியவில்லை.
