கொசு ஒழிப்பு ஆய்வு 3 நிறுனங்களுக்கு அபராதம் விதிப்பு
கொசு ஒழிப்பு ஆய்வு 3 நிறுனங்களுக்கு அபராதம் விதிப்பு
ADDED : நவ 16, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி பகுதியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக,
டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில், மாநகராட்சி அதிகாரிகள்
அவ்வப்போது ஆய்வில் ஈடுபடுகின்றனர்.
இதன்படி பி.பி.அக்ராஹாரம்
மற்றும் சுற்று வட்டாரத்தில், வீடு மற்றும் தனியார் நிறுவனங்களில்,
மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று
ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆகவி ஸ்பின்னிங் மில், ஜெயம் புராசசிங்
மற்றும் அபெக்ஸ் காட்டன் மில் என்ற மூன்று மில்களில், கொசு உற்பத்திக்கு
ஏதுவான நிலை கண்டறியப்பட்டது. இதனால் மூன்று நிறுவனங்களுக்கும்
தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
