/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
த.வெ.க., தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் பட்டாசு வெடித்ததால் தீயில் எரிந்த பந்தல்

ADDED : ஏப் 14, 2025 06:57 AM
ஈரோடு: ஈரோடு, மூலப்பாளையம், அண்ணமார் பெட்ரோல் பங்க் எதிரே, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. 57வது வார்டு செயலாளர் மாரிமுத்து ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது தீப்பொறி பறந்து அருகிலிருந்த சுமை தொழிலாளர் சங்க பந்தலில் பட்டு தீப்பிடித்து எரிந்தது. தீ பரவியதில் அப்பகுதி சுடுகாட்டில் இருந்த காய்ந்த புற்களும் தீப்பிடித்து எரிந்தது.
ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். தகவலறிந்து ஈரோடு தாலுகா போலீசார் சென்றனர். சுமை தொழிலாளர் சங்க பந்தலில் தீப்பிடித்தது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தினர், சுமை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இரு தரப்பினரும் சுமுகமாக சென்றதால், போலீசாரும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
இதேபோல் காந்திஜி சாலையில் உள்ள, வேலு மெஸ் பாஸ்ட் புட் கடையில் கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அப்போதுதான் மூலப்பாளையத்தில் பணியை முடித்து அலுவலகத்துக்கு வீரர்கள் திரும்பி கொண்டிருந்தனர். இந்த தகவல் வந்ததால் அங்கும் சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், 10 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.