ADDED : ஜூன் 22, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பு.புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி-சத்தி சாலையில், மர இழைப்பகம் இயங்கி வருகிறது. நேற்று அதிகாலை, 2:௦௦ மணியளவில் மரக்கடையில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் பற்றி எரிந்தது.
அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் தகவலின்படி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். மக்களுடன் இணைந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீயில் மரக்கதவு, மர பொருட்கள், மின் மோட்டார் எரிந்து சேதமடைந்து விட்டது. புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரணையில், மின் மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.