ADDED : ஜூலை 21, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மனைவி ராணி பரமேஸ்வரி, 56; மஞ்சள் மண்டி குடோன் தொழிலாளி. நேற்று காலை ராணி பரமேஸ்வரி வேலைக்கு சென்ற நிலையில், 10:15 மணியளவில் வீட்டில் இருந்து புகை வந்தது.
அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் விற-குகள், துணிகள் எரிந்து சாம்பலானது.மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காஸ் அடுப்பு இல்லாத நிலையில், விறகைதான் அடுப்பு எரிக்க பயன்படுத்துகின்றனர். இதற்காக அறை முழுவதும் அடுக்கி வைத்திருந்த விறகு எரிந்து விட்டது. சேத மதிப்பு, 40 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
