sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரியில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

/

காவிரியில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

காவிரியில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

காவிரியில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை


ADDED : ஆக 21, 2025 02:06 AM

Google News

ADDED : ஆக 21, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணை பாதுகாப்பு கருதி நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணையில் இருந்து 90,000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதேபோல், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, 5,396 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், இந்த நீரும் காவிரி ஆற்றில் கலக்கிறது.

இதன் காரணமாக, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி, தண்ணீர் செல்கிறது. அதேசமயம், தொடர் நீர்வரத்து காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும், சுழல்களில் சிக்கி கொள்ளும் அபாயமும் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், மேடான இடங்களுக்கு செல்ல வேண்டும், ஆபத்தான வகையில் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும்

அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மேட்டூர் அணை ஐந்தாவது முறையாக நடப்பாண்டு நிரம்பி, அணையில் இருந்து, 94 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று மதியம் காவிரி ஆற்றில் வெளியேறியது. இதனால், பவானியில் காவிரி ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டவாறு பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே பொதுமக்கள், ஆற்றின் கரையோர பகுதியில் நின்று மொபைல்போனில் படம் பிடித்தனர்.

* பவானியில் பிரசித்திபெற்ற கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. ஏராள

மானோர் தினமும் வந்து முக்கூடலில் குளித்து, சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நேற்று கூடுதுறையில் பக்தர்களுக்கு குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்காமல் இருப்பதற்காக, தகரசீட்டுகள் மற்றும் இரும்பு பைப்கள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us