/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளத்தில் மூழ்கிய பாலம் சீரமைப்பு; போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

ADDED : அக் 21, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: நம்பியூர் அருகே புளியம்பட்டி சாலையில், கொட்டக்காட்டுபாளையம் ஓடையின் குறுக்கே, தரைப்பாலத்தை இடித்து விட்டு, உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொட்டிய மழையால், தரைப்பாலம் மூழ்கியதுடன், கட்டுமான பொருட்களும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் நம்பியூர்-புளியம்பட்டி இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நேற்று மாலை, 6:௦௦ மணி முதல், தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.