/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எல்லை பகவதியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
/
எல்லை பகவதியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
ADDED : டிச 18, 2024 01:27 AM
எல்லை பகவதியம்மன்
கோவிலில் பூச்சாட்டு விழா
கொடுமுடி, டிச. 18-
கொடுமுடி, வடக்கு தெருவில் அமைந்துள்ள எல்லை பகவதியம்மன் மற்றும் எல்லை கருப்பண்ணசாமி கோவில் பூச்சாட்டு விழா, நேற்று காவிரியிலிருந்து கரகம் பாலித்து, மேள தாள வாத்தியங்களுடன் நடந்தது.
இன்று முதல், 25ம் தேதி வரை தினசரி காலை காவிரியிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல் நடைபெறும். இரவு, 8:00 மணிக்கு சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடைபெறும். 25 மதியம் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை நடைபெறும். மாலை, 5:00 மணிக்கு, 40 அடி அக்னி குண்டம் இறங்குதல், இரவு, 8:00 மணிக்கு மகா பூஜை நடைபெறும். 8:30 மணிக்கு கும்பம் காவிரி செல்லுதல் நடைபெறும். 26ம் தேதி எல்லை கருப்பண்ணாசாமி பூஜை மற்றும் வேல் ஊர்வலம் நடைபெறும். 27 எல்லை பகவதியம்மனுக்கு சிம்ம வாகனத்தில் முத்துபல்லக்கு ஊர்வலம் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், புதுமாரியம்மன் பாதயாத்திரை குழுவினர் மற்றும் மகுடேஸ்வரர் மாத சிவராத்திரி வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.