ADDED : நவ 29, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயத்தில் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், உணவுத் திருவிழா நேற்று நடத்தப்பட்டது.
இதில், 200க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, இயற்கை தானியங்களை கொண்டு மாணவ, மாணவியர் தயாரித்து எடுத்து வந்து பார்வைக்கு வைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவியர், ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

