/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு கல்லுாரியில் உணவு தயாரிக்கும் போட்டி
/
கொங்கு கல்லுாரியில் உணவு தயாரிக்கும் போட்டி
ADDED : அக் 14, 2024 05:14 AM
ஈரோடு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி இணைந்து, மாணவ-மாணவியருக்கு உணவு தயாரிக்கும் போட்டி
நடந்தது.
இதில் கல்லுாரியின் பல்வேறு துறையில் இருந்து, 50க்கும் மேற்-பட்ட குழுக்கள் கொண்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர். கல்-லுாரி தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன், பேராசிரி-யர்கள் ஏற்பாடு செய்தனர். முதல் பரிசை இறுதியாண்டு வணிகவியல் துறை மாணவியர் பவிக்சனா, கவிதா, தேவதர்ஷினி பெற்றனர். இரண்டாமிடத்தை உயிர் வேதியல் துறை மகாதர்ஷினி, சுபாராணி, பூவரசன்; மூன்றா-மிடத்தை கணினி துறை நந்தினி, துர்கா, காஞ்சனா; நான்காமி-டத்தை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டு துறை தாருன்யா, லக்சஷனா, கங்கா பிடித்தனர். இவர்களுக்கு பரிசு
வழங்கப்பட்டது.