/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மீன் வறுவல் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு
/
மீன் வறுவல் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு
மீன் வறுவல் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு
மீன் வறுவல் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு
ADDED : டிச 06, 2025 03:09 AM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை பூங்கா எதிரில், 30க்கும் மேற்பட்ட மீன் வறுவல் கடைகள் உள்ளன. அங்கு, உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், மீன்வளத்துறை ஆய்வாளர் ரமேஷ் பாபு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இரண்டு மீன் கடை-களில் கெட்டுப்போன மீன்கள் இருந்ததை கண்டுபிடித்து, 5 கிலோ எடையுள்ள மீன்களை கீழே கொட்டி அழித்தனர்.
அப்பகுதியில் உள்ள அனைத்து மீன் விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள், தரமற்ற மீன் உணவுகளை விற்பனை செய்யக்கூடாது எனவும், செயற்கை நிறமிகள் சேர்த்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் நடத்-தப்படும் மீன் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்-படும் மீன்களை ஆய்வு செய்தனர்.