/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நேதாஜி தினசரி சந்தை வ.உ.சி., பூங்காவிலேயே நிரந்தரமாக செயல்பட வணிகர்கள் சங்கம் தீர்மானம்

ADDED : டிச 06, 2025 03:09 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் செயல்படும் தற்காலிக நேதாஜி தினசரி மார்க்கெட்டில் உள்ள ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் துணை தலைவர் சாந்து முகம்மது தலைமையில் நடந்தது. செயலர் தமிழரசன் முன்னிலை வகித்தார்.
ஈரோடு வ..உ.சி., பூங்காவில் கடந்த, 2020 முதல் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி சந்தை மூலம் மாநகராட்-சிக்கு ஆண்டுக்கு, 2.50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறு வணிகர்கள் வந்து செல்ல எளிதாக உள்ளது. எனவே தற்காலிகமாக செயல்-படும், வ.உ.சி., மைதானத்திலேயே தொடர்ந்து நிரந்தரமாக கடைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினர். சங்க தலைவராக சுப்-பிரமணியம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொருளாளர் உதயகுமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் சண்முகவேல், இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், சுப்பிரமணியம், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்-றனர்.