/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் பலியானால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை
/
மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் பலியானால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை
மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் பலியானால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை
மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் பலியானால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை
ADDED : டிச 06, 2025 03:10 AM
ஈரோடு: ஈரோடு வனக்கோட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அளவில், ஈரோடு மாவட்டம் ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனுார் வனக்கோட்டங்களில் யானைகள் எண்ணிக்கை அதிகம் உள்ளன. அந்தியூர் வனச்சரகம், பர்கூர் மலை, ஒந்தனை வனக்காவல் பகுதி, கடைஈரெட்டி பழங்குடியின கிராமத்தை சேர்ந்த ரமேஷ், வருவாய் புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்கிறார். கடந்த, 4 ல் ஒரு யானை, அவரது நிலத்தின் வேலி அருகே இறந்து கிடந்தது. கள விசாரணையில், மின்சார தாக்கு-தலால் யானை இறந்தது உறுதியானது.
வன உயிரின வழக்கு பதிந்து விசாரணை நடக்கிறது. இருப்-பினும், யானை இறப்பின் உண்மை காரணம், நிலையான வழி-காட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பிரேத பரிசோதனை, ஆய்-வக அறிக்கை பெற்ற பின், உறுதி செய்ய இயலும்.யானை இறப்பு, வடபர்கூர் காப்பு காட்டில் இருந்து, 980 மீட்-டரில் வருவாய் புறம்போக்கு நிலத்தில் நடந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்ட மின்வேலியை வனத்துறையினர், கடந்த நவ., 23ல் ஆய்வு செய்து, '12வி' நேரடி மின்னோட்டத்தில் செயல்-படும் மின் கலத்தால் அமைக்கப்பட்ட மின்வேலி செயல்படு-வதை அறிந்தனர். அப்பகுதியில் அனைத்து மின் வேலிகளையும் அன்று ஆய்வு செய்துள்ளனர். அதில், ரமேஷின் மின் வேலி, விதி-களின்படி அமையாததை சுட்டிக்காட்டி, நோட்டீஸ் வழங்கியுள்-ளனர்.
மின்சாரம் தாக்கி யானை இறப்பை தவிர்க்கவும், விதிகள் பின்பற்-றலை உறுதி செய்ய களப்பணியாளர்கள், சிறப்பு குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து, உறுதி செய்கின்றனர். ஈரோடு வனக்-கோட்டத்தில் மின் வேலி அமைக்க, 645 விண்ணப்பங்கள் விவ-சாயிகளிடம் பெறப்பட்டு, 49 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்-கப்பட்டுள்ளது. இருந்தும் சில விவசாயிகளின் விதிமீறலால், இது போன்ற சம்பவம் நடக்கிறது. மின்வேலியை விதிப்படி மட்டும் அமைத்து பராமரிக்க வேண்டும். ஆபத்து நேரத்தில் தானாகவே மின்னிணைப்பு துண்டிக்கும்படி இருக்க வேண்டும்.
யானை போன்ற பிற வன உயிரினங்கள் மின்சாரம் தாக்கி இறந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது வன உயிரினம் பாது-காப்பு சட்டப்படி வழக்குடன், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்-படும். குற்றம் நிரூபனமானால், 3 முதல், 7 ஆண்டு சிறை தண்-டனை கிடைக்கும். இவ்வாறு
எச்சரிக்கப்பட்டுள்ளது.

