/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்ளை முயற்சி காய்கறி கடை பணியாளர் கைது
/
ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்ளை முயற்சி காய்கறி கடை பணியாளர் கைது
ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்ளை முயற்சி காய்கறி கடை பணியாளர் கைது
ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்ளை முயற்சி காய்கறி கடை பணியாளர் கைது
ADDED : டிச 06, 2025 03:11 AM
ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம், கரூர் பைபாஸ் சாலை ஆஸ்ரம் பள்ளி அருகே, ஐ.ஓ.பி., வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த, 2ல் மர்ம நபர் ஒருவர் புகுந்து, இயந்திரத்தை திறக்க முயன்றார்.
அப்போது அலாரம் அடித்ததால் அவ்வங்கி ஊழியர் ஒருவர் அங்கு வந்துவிட்டார். அதற்குள் மர்ம நபர், தப்பி சென்றார்.ஏ.டி.எம்., மைய ஷட்டரை பூட்டிய ஊழியர் அங்கிருந்து சென்று-விட்டார். கடந்த, 3 ல் வங்கி நிர்வாகத்தினர் புகார் செய்ததும், சூரம்பட்டி போலீசார் விசாரித்தனர். விசாரணையில், துாத்துக்கு-டியை சேர்ந்த துரைபாண்டி மகன் முருகேசன்,28, ஈரோடு கொல்லம்பாளையத்தில், காய்கறி கடையில் வேலை செய்து வந்தார்.
ஈரோடு, ஏ.கே., நகரில் வசித்து வந்த அவர், ஹெல்
மெட் அணிந்து, ஏ.டி.எம்.,ல் புகுந்து ஒயர்களை துண்டித்து, இயந்திரத்தை சேதப்படுத்தி கொள்ளை அடிக்க முயன்றது தெரிய-வந்தது. இயந்திரத்தில், 12 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால், அலாரம் அடித்ததால், கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டது. இவர் அணிந்திருந்த ெஹல்மெட்டின் பின்புறம் 'டிவிஎஸ்' என்-பது உட்பட சில எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. அவை 'சிசிடி-வி'யில் நன்கு பதிவாகி இருந்ததால், அதை வைத்து முருகே-சனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

