/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தந்தம் விற்க முயன்ற ஆசாமிகள் வரவழைத்து பிடித்த வனத்துறை
/
தந்தம் விற்க முயன்ற ஆசாமிகள் வரவழைத்து பிடித்த வனத்துறை
தந்தம் விற்க முயன்ற ஆசாமிகள் வரவழைத்து பிடித்த வனத்துறை
தந்தம் விற்க முயன்ற ஆசாமிகள் வரவழைத்து பிடித்த வனத்துறை
ADDED : ஜூலை 30, 2025 01:28 AM
அந்தியூர், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசிராமணி கணேசன், 40; பெரியசாமி, 59; சேலம் மாவட்டம் பாலமலை செல்லப்பன் ஆகியோர் சேர்ந்து, யானை தந்தங்களை விற்க முயற்சிப்பதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வனத்துறையினர் ஏற்பாடு செய்த நபர்கள், மூவரிடமும் தந்தம் வாங்குவது போல போனில் பேசியுள்ளனர்.
நம்பிய மூவரும் அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம் வாய்க்கால்கரை பகுதிக்கு வந்தனர். அப்போது சென்ற ரேஞ்சர் ராஜா தலைமையிலான வனத்துறையினரை கண்டதும் மூவரும் தப்பியோட முயன்றனர். இதில் கணேசன் சிக்கினார். அவர் வைத்திருந்த பையில் இரண்டு யானை தந்தங்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். தப்பி. பெரியசாமியை, வனத்துறை தனிப்படையினர் அவரது வீட்டில் நேற்று கைது செய்தனர். இருவரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர். செல்லப்பனை தேடி வருகின்றனர்.