sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனத்துறை சோதனை சாவடியில் அடாவடி; ரூ.50 நுழைவு கட்டணத்துக்கு ரூ.500 வசூல்

/

வனத்துறை சோதனை சாவடியில் அடாவடி; ரூ.50 நுழைவு கட்டணத்துக்கு ரூ.500 வசூல்

வனத்துறை சோதனை சாவடியில் அடாவடி; ரூ.50 நுழைவு கட்டணத்துக்கு ரூ.500 வசூல்

வனத்துறை சோதனை சாவடியில் அடாவடி; ரூ.50 நுழைவு கட்டணத்துக்கு ரூ.500 வசூல்


ADDED : டிச 25, 2024 07:45 AM

Google News

ADDED : டிச 25, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட காராச்சிகொரையில், வனத்துறை சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இங்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில் கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு, 50 ரூபாய் வசூலிக்கின்றனர். செக்போஸ்டில் கூடுதல் தொகை வசூலிப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது. காராச்சிகொரை செக்போஸ்டில் ஊழியர் ரம்யா, நேற்று மதியம் பணியில் இருந்தார்.

அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வாரம் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் தொட்டகோம்பை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக, சத்தியமங்கலத்தை சேர்ந்த இருவர் பொலிரோ ஜீப்பில் வந்தனர். ஜீப் ஓட்டுனரிடம் ரம்யா விபரங்களை கேட்டு, கோவிலுக்கு செல்ல வேண்டுமென்றால், 500 ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார். அவரும், ௫௦௦ ரூபாய் தந்தபோது, 50 ரூபாய்க்கு ரசீது வழங்கியுள்ளார். இதை அவருடன் வந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இது தற்போது பரவி வருகிறது.

இதுகுறித்து பவானிசாகர் ரேஞ்சர் சதாம் உசேன் கூறுகையில், ''தற்போது கொடி நாள் நிதி வசூல் செய்யப்பட்டு வருவதால், அதற்காக கூட வசூலித்திருக்கலாம். ஆனாலும் பணியில் இருந்த வனக்காப்பாளர் ரம்யாவிடம், கூடுதலாக பணம் வசூலித்தது தொடர்பான வீடியோ குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us