/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முருகன் கோவில் மலைப்பாதையில் பணியை நிறுத்த உத்தரவு கோவில் நிர்வாகத்துக்கு வனத்துறை நோட்டீஸ்
/
முருகன் கோவில் மலைப்பாதையில் பணியை நிறுத்த உத்தரவு கோவில் நிர்வாகத்துக்கு வனத்துறை நோட்டீஸ்
முருகன் கோவில் மலைப்பாதையில் பணியை நிறுத்த உத்தரவு கோவில் நிர்வாகத்துக்கு வனத்துறை நோட்டீஸ்
முருகன் கோவில் மலைப்பாதையில் பணியை நிறுத்த உத்தரவு கோவில் நிர்வாகத்துக்கு வனத்துறை நோட்டீஸ்
ADDED : மார் 29, 2025 07:29 AM
சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் தார்ச்சாலை சேதமானது. இதனால் சாலையை அகலப்படுத்தி சீரமைக்கும் வகையில், 6.௭௦ கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், 24ம் தேதி காணொலி காட்-சியில், முதல்வர் ஸ்டாலின் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பின் வனத்துறை அளவீடு, வனத்துறை அனுமதி என இரண்டு மாதம் தாமதத்துக்கு பிறகு பணி தொடங்கியது. ஆறு மாதத்தில் பணி முடிந்து விடும் என்று தெரிவித்தனர். இந்த வகையில் மார்ச் மாதத்துக்குள் பணி முடிந்திருக்க வேண்டும்.ஆனால் தற்போதும் பணி முடியாமல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மலைப்பாதையில் சாலை அமைக்கும் பணியை நிறுத்த வனத்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்-பால நாயுடு, கோவில் செயல் அலுவலருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: மலைப்பாதையில் சாலைகளை அகலப்படுத்தும்போது சிறு மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பாறைகள் உடைக்கப் பட்டுள்ளன. எங்களது அனுமதி-யின்றி நீங்கள் எப்படி தன்னிச்சையாக செயல்படலாம்? இதற்கு உரிய விளக்கம் அளிக்கவும். அதன் பிறகே பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு நோட்டீசில் தெரிவித்துள்ளார்.மேலும், வனத்துறைக்கு செலுத்த வேண்டிய உரிமை தொகை, 2017 முதல் 2022ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு, ௪௩,௯௫௦ ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த தொகையை கோவில் நிர்வாகத்தினர் தாமதமாக செலுத்தியுள்ளனர்.
இதற்கு வட்டி மற்றும் அபராதமாக, ௨.௯௬ லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் வனத்துறை வேண்டுகோள் விடுத்-துள்ளது. மீண்டும், 2023 முதல் ௨௦௨5 வரை ஆண்டு ஒன்றுக்கு, 65 ஆயிரத்து 760 ரூபாயாக வனத்துறை உயர்த்தியுள்ளது. இதையும் தாமதமாக செலுத்தியதாக கூறி, 2017 முதல் ௨௦௨௫ வரை, ௬.௮௫ லட்சம் ரூபாய் செலுத்துமாறு வனத்துறை நோட்டீசில் அறிவுறுத்-தியுள்ளது. ஆனால் கோவில் நிர்வாகமோ, வட்டி மற்றும் அபராத வட்டி செலுத்தாமல் உயர்த்தப்பட்ட உரிமை தொகையை மட்டும் செலுத்தியுள்ளது.இதனிடையே சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதை, எங்களுக்கு தான் சொந்தம் என்று, வனத்துறையினர் தொடர்ந்து வாய்மொழி மூலம் பணிகளை தடுத்து வருவதாக கூறப்படுகிறது.வட்டி மற்றும் அபராத தொகை பெறுவதற்காக, மலைப்பாதை பணியில் கோவில் நிர்வாகம் விதிமீறி விட்டதாக வனத்துறை குற்றம்சாட்டி பணிகளை நிறுத்த முயற்சி நடக்கிறதா? அல்லது வனத்துறையிடம் அனுமதி பெறவே இரு மாதங்கள் தாமதமான நிலையில், அதை கணக்கிட்டு பணியை வேகப்படுத்தி முடிக்-காமல், வனத்துறைக்கு இப்படி ஒரு வாய்ப்பை, கோவில் நிர்-வாகம் கொடுத்து விட்டதா? என்றும், பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா அல்லது கோவில் நிர்-வாகம் சமயோசிதமாக செயல்பட்டு மலைப்பாதை பணியை தொடருமா? என்றும், பக்தர்கள் மத்தியில்எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.