ADDED : நவ 07, 2026 05:38 AM

அந்தியூர்:பர்கூர்மலையில்
உள்ள சோளகனை மலை கிராமரத்தில் அரசு உறைவிட நடுநிலைப்பள்ளி
உள்ளது. இங்கு மாவோயிஸ்ட் போலீசார் சார்பில், வன தீபாவளி நேற்று
கொண்டாடப்பட்டது. போலீஸ்-மக்கள் நல்லுறவை மேம்படுத்த
கொண்டாடப்பட்ட வன தீபாவளியில், உறைவிட நடுநிலைப்பள்ளி மாணவர்கள்
பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இங்கு பயிலும், 85 குழந்தைகளுக்கு
இனிப்பு, காரம் மற்றும் டீ-சர்ட், ஸ்கூல் பேக், நோட்புக், பென்சில், பேனா
வழங்கப்பட்டது. திருக்குறள் மற்றும் பேச்சுப்போட்டி நடத்தி வெற்றி
பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். பள்ளிக்கு கிரைண்டர்,
பழங்குடியின கிராமத்துக்கு, 5 சோலார் லைட்டுகள் போலீசார் சார்பில்
வழங்கப்பட்டன. நிகழ்வில் வெள்ளித்திருப்பூர் இன்ஸ்பெக்டர்
ஆனந்தகுமார் நலத்திட்ட உதவி வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள்,
போலீசார், மக்கள் பங்கேற்றனர்.
