/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழகத்தில் முன்னுதாரண ஆட்சி தந்த ஜெ.,- இ.பி.எஸ்., அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெருமிதம்

ADDED : செப் 30, 2025 01:28 AM
ஈரோடு, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஈரோட்டில் நேற்றிரவு நடந்தது. மாநகர் மாவட்ட செயலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் ஆனந்தன் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில்தான் ஈரோடு உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மாநில அளவில் ஒரே ஆண்டில், 13 மருத்துவ கல்லுாரியை கொண்டு வந்து, அ.தி.மு.க., ஆட்சி சாதனை படைத்தது. தி.மு.க., அரசு தினமும் அறிக்கை விடுவதும், மேடைகளில் சாதனை படைத்ததாக பேசுவதை மட்டுமே செய்து வருகின்றனர்.
கடந்த, 2011-2021ம் ஆண்டு வரை, 10 ஆண்டுகள் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவும், இ.பி.எஸ்.,சும் தேசிய அளவில் பல சாதனைகளை செய்து, நாட்டுக்கே முன்னுதாரணமாக மாநிலமாக மாற்றினர். இந்த ஆட்சி எப்போது முடியும், இ.பி.எஸ்., ஆட்சி எப்போது மீண்டும் வரும் என எதிர்பார்த்துள்ளனர்.
மகளிருக்கு, 1,000 ரூபாய் தருகிறோம் எனக்கூறிவிட்டு, அத்தனை விலைவாசியையும் ஏற்றினர். மின் கட்டணம், சொத்து வரி, குப்பை வரி, பத்திரப்பதிவு கட்டணம், தொழில் வரி என அனைத்தையும் உயர்த்தி, அதைப்போல, 4 மடங்கு தொகையை தினம் தினம் பறித்து வருகின்றனர். இவை அனைத்திலும் நல்ல மாற்றம் வர வேண்டும், என மக்கள் உணரத்துவங்கிவிட்டனர். இன்னும், 4, 5 மாதம்தான் முதல்வர் சேரில் அமர முடியும். அதன் பின், உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அதை இ.பி.எஸ்., செயல்படுத்துவார். இவ்வாறு பேசினார். முன்னாள் அமைச்சர் வேலுசாமி உட்பட பலர் பேசினர்.