/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
17.79 லட்சம் வாக்காளர்களுக்கு படிவம் வழங்கல்: கலெக்டர் தகவல்
/
17.79 லட்சம் வாக்காளர்களுக்கு படிவம் வழங்கல்: கலெக்டர் தகவல்
17.79 லட்சம் வாக்காளர்களுக்கு படிவம் வழங்கல்: கலெக்டர் தகவல்
17.79 லட்சம் வாக்காளர்களுக்கு படிவம் வழங்கல்: கலெக்டர் தகவல்
ADDED : நவ 13, 2025 01:17 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 17.79 லட்சம் வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டுவிட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில் கடந்த, 4 முதல், 2,222 ஓட்டுச்சாவடிகளிலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் அனைத்து வாக்காளர்களுக்கும் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. டிச., 4 வரை படிவம் வழங்கும் பணி நடக்க உள்ளது. மாவட்டத்தில், 19 லட்சத்து, 97,189 வாக்காளர்களில் நேற்று வரை, 17 லட்சத்து, 79,661 படிவங்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்காளர்களுக்கு ஓரிரு நாளில் படிவங்கள் வழங்கப்பட்டு, பணி நிறைவடையும்.
இதனை தொடர்ந்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் வீட்டுக்கு வந்து கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்றுக் கொள்ள வர உள்ளனர். அதற்குள் படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கணக்கெடுப்பு படிவம் தவிர, பிற ஆவணங்கள் கணக்கெடுப்பு காலத்தில் சமர்பிக்க தேவையில்லை. இப்பணிக்காக, 8 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 29 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 226 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
படிவம் வழங்கும் பணி மற்றும் தேர்தல் பிரிவை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். தாசில்தார் முத்துகிருஷ்ணன், தேர்தல் பிரிவு தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

