/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிரைவருக்கு ஆசை காட்டி காரை பறித்து சென்ற நான்கு பேர் கைது
/
டிரைவருக்கு ஆசை காட்டி காரை பறித்து சென்ற நான்கு பேர் கைது
டிரைவருக்கு ஆசை காட்டி காரை பறித்து சென்ற நான்கு பேர் கைது
டிரைவருக்கு ஆசை காட்டி காரை பறித்து சென்ற நான்கு பேர் கைது
ADDED : ஜன 21, 2026 10:37 AM
ஈரோடு: ஈரோடு, சாஸ்திரி நகர், கருப்பண்ண சுவாமி கோவில் வீதியை சேர்ந்தவர் அன்சர் அலி, 20; ஏழு லட்ச ரூபாய் மதிப்பிலான டோயடோ கிளென்சா காரை, ரெட் டாக்சி நிறுவனத்தில் இணைத்து ஓட்டி வருகிறார். கடந்த, 19ம் தேதி இரவு, 10:00 மணியளவில் காளைமாட்டு சிலை எல்.ஐ.சி., அலுவலகம் அருகே காருடன் நின்றிருந்தார். அப்போது வந்த நபர், சந்தோஷ-மாக இருக்கலாம் என்றுகூறி, பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற பின், இந்த இடம் பாதுகாப்பில்லை என்று அன்சர் அலி தெரிவித்-துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மூவர், அன்சர் அலியை நகர விடாமல் கைகளை பிடித்து கொண்டனர். இருவர் கத்தியை காட்டி மிரட்டி, 1,000 ரூபாய், மொபைல் போன், வெள்ளி பிரேஸ்லெட்டை பறித்துள்ளனர். வெளியே சொன்னால் கொன்று-விடுவோம் என்று மிரட்டிவிட்டு, அவரது காரையும் எடுத்து தப்-பினர். சூரம்பட்டி போலீசில் நேற்று காலை புகார் செய்தார். போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரையும் தேடினர்.காரை தேடியபோது விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் இருப்பது அறிந்து, நேற்று மதியம் சென்றனர். காருடன் நால்வரையும் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் கோவை, சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த கேட்-டரிங் தொழிலாளி மவுலீஸ்வரன், 21, தொழிலாளி சஞ்சய் கிஷோர், 21; கோவை கே.கே.புதுார் சாய்பாபா காலனி பகுதி ஹரிஹரன், 19; ஈரோடு மரப்பாலம் பகுதி முகமது நிகான், 19; இருவரும் பெருந்துறை பாலிக்டெக்னிக் கல்லுாரி மாணவர்கள் என்பதும் தெரிந்தது. மூன்று பிரிவுகளில் நால்வர் மீதும் வழக்குப்-பதிந்து கைது செய்தனர். கார், மொபைல் போன், பிரேஸ்லெட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

