/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்துணவு ஊழியர்கள் போராட்டம் துவக்கம்
/
சத்துணவு ஊழியர்கள் போராட்டம் துவக்கம்
ADDED : ஜன 21, 2026 10:38 AM
தாராபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சத்-துணவு ஊழியர்கள், நேற்று போராட்டத்தை தொடங்கினர்.
இதன்படி தாராபுரம் வட்டத்தில் உள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள், போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் அரசினர் மேல்நிலை பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர் படிக்கும் நிலையில், 150 பேர் சத்துணவு சாப்பிடுகின்-றனர். போராட்டம் காரணமாக சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர், நேற்று பணிக்கு வரவில்லை. உதவியாளர் ஒருவர் மட்டுமே பணிக்கு வந்தார்.அவர் சமைத்து மாணவர்களுக்கு பரிமாறியுள்ளார். இதேபோல் பல பள்ளிகளிலும், சத்துணவு ஊழியர்கள் வராத போதிலும், சத்-துணவு வழங்குவது தடைபடவில்லை என்று, தலைமை ஆசிரி-யர்கள் தெரிவித்தனர்.

