தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சகோதரிகள் உள்பட நான்கு பேர் மாயம்

சகோதரிகள் உள்பட நான்கு பேர் மாயம்

சகோதரிகள் உள்பட நான்கு பேர் மாயம்


ADDED : மே 26, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, பழையபாளையம், சுத்தானந்தன் நகரை சேர்ந்தவர் ராஜா, 54; ஜவுளி சார்ந்த தொழில் செய்கிறார். இவரது மனைவி சில ஆண்டுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். இவரின் மகள்கள் ஹரிணி, 20, கீர்த்தி, 17; ஈரோடு ரங்கம்பாளையத்தில் கல்லுாரியில் படித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி சென்றவர்கள், சில நாட்களில் வீடு திரும்பினர். இந்நிலையில் கடந்த, 24ம் தேதி இரவு மீண்டும் மாயமாகி விட்டனர். ராஜா புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஈரோடு, கஸ்பாபேட்டை, செல்லப்பம்பாளையம், சுந்தரம் தோட்டத்தை சேர்ந்த கார்த்தி மனைவி மைலா. இவர்களது மகள் மோகனா, 19; பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த, 23ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஈரோடு, கருங்கல்பாளையம் குயிலான்தோப்பை சேர்ந்தவர் அமுதா. ஈரோடு தினசரி காய்கறி சந்தையில் இலை வியாபாரம் செய்கிறார். இவரது மகள் ரசிகா, 19; அடிக்கடி மொபைல்போன் பயன்படுத்தியதால் அமுதா கண்டித்தார். இதனால் கடந்த, 24ல் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. கருங்கல்

பாளையம் போலீசார் விசாரிக்

கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us