/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாத இலவச ஆன்மிக சுற்றுலா
/
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாத இலவச ஆன்மிக சுற்றுலா
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாத இலவச ஆன்மிக சுற்றுலா
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாத இலவச ஆன்மிக சுற்றுலா
ADDED : ஜூலை 19, 2025 01:35 AM
ஈரோடு:ஆடி மாதத்தை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இலவச ஆன்மிக சுற்றுலா அறிவிக்கப்பட்டது.
இதன்படி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, ஆன்மிக பயணம் நேற்று தொடங்கியது. பக்தர்கள் பயணிக்கும் பஸ்சை, அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பிறகு பக்தர்களுக்கு குடிநீர், காலை சிற்றுண்டி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன், அந்தியூர் பத்ரகாளியம்மன், பவானி செல்லாண்டியம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து அறநிலைய துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆடி மாத வெள்ளிகிழமைகளில், இந்த ஒருநாள் ஆன்மிக சுற்றுலா நடக்கும். பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 60 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் வயது சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், ஆதார் கார்டு, ஆண்டு வருமானம் 2,00,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பதற்கான வருமான சான்றுடன் கூடிய விண்ணப்பத்தை, ஈரோட்டில் காந்திஜி சாலையில் உள்ள அறநிலைய துறை இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இன்று (நேற்று) முதல் வெள்ளிக்கிழமையில், மூன்று ஏ.சி., பஸ்களில், 57 பக்தர்களை அழைத்து சென்றோம். காலை, மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் கோவில் பிரசாதம் வழங்கினோம். இதேபோல் ஆடி மாத வெ ள்ளிக்கிழமைகளான ஜூலை 25, ஆகஸ்ட் 1, 8, 15 தேதிகளில் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர்.
இவ்வாறு கூறினர்.