/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாரிசுகளுக்கு சலுகை கோரி சுதந்திர போராட்ட வீரர் மனு
/
வாரிசுகளுக்கு சலுகை கோரி சுதந்திர போராட்ட வீரர் மனு
வாரிசுகளுக்கு சலுகை கோரி சுதந்திர போராட்ட வீரர் மனு
வாரிசுகளுக்கு சலுகை கோரி சுதந்திர போராட்ட வீரர் மனு
ADDED : மார் 05, 2024 01:41 AM
ஈரோடு;சுதந்திர போராட்ட வீரர்களின் வழித்தோன்றல் வாரிசுகள் நலச்சங்கத்தினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:
சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தை தேசிய குடும்பமாக அறிவித்து, அரசு விழாக்களில் முதல் மரியாதை வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்காக நலவாரியம் அமைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உதவித்தொகை, அரசு மற்றும் தனியார் மருத்துவ சேவைகள், குடும்ப வாரிசுகள் அனைவருக்கும் தமிழகம் முழுவதும் இலவச பஸ் பயணம் சேவை வழங்க வேண்டும்.
வாரிசுகள், அவரை சார்ந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.