/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
/
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
அம்மாபேட்டை காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED : ஆக 28, 2025 01:43 AM
பவானி, அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை குருவரெட்டியூர், ஊமாரெட்டியூர், அம்மாபேட்டை, பூதப்பாடி, பூனாச்சி, குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஹிந்து முன்னணி சிலைகள் 7, பொதுமக்கள் சார்பில், 28 என மொத்தம், 35 சிலைகள் வைக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக விசேஷ பூஜைகள் நடந்தன.
நேற்று அந்த சிலைகள் அனைத்தும், மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாக மினிஆட்டோவில் எடுத்து வரப்பட்டு, ஊமாரெட்டியூர் பிரிவு, சொக்கநாதர் கோவில் காவிரி ஆற்றுப்படித்துறை மற்றும் சிங்கம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. அம்மாபேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.