/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டுக்கு சென்று மிரட்டிய காதலனால் காதலி விபரீத முடிவு
/
வீட்டுக்கு சென்று மிரட்டிய காதலனால் காதலி விபரீத முடிவு
வீட்டுக்கு சென்று மிரட்டிய காதலனால் காதலி விபரீத முடிவு
வீட்டுக்கு சென்று மிரட்டிய காதலனால் காதலி விபரீத முடிவு
ADDED : ஜூலை 26, 2025 01:15 AM
பவானி, சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் ஆப்ரின், 24; அஞ்சல் வழியில் எம்.பி.ஏ., படித்து வந்தார். இவரது உறவினரான அப்ரோஸ். இருவரும் காதலித்து வந்தனர். ஆப்ரின் பெற்றோருக்கு தெரிய வந்து அவரை சமாதானப்படுத்தினர். இதில் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்ய சம்மதித்தார். இதுகுறித்து அப்ரோஸுக்கு போனில் தகவல் தெரிவித்ததுடன், இனி தன்னுடன் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த, 21ல் தனது பெற்றோர், உறவினர்களுடன் ஆப்ரின் வீட்டுக்கு அப்ரோஸ் பெண் பார்க்க சென்றுள்ளார். ஆப்ரின் வீட்டார் மறுத்த நிலையில், தன்னிடம் உள்ள ஆப்ரின் போட்டோக்களை வெளியிடுவேன். யாரும் திருமணம் செய்து கொள்ளவும் விடமாட்டேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த ஆப்ரின், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.