/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெறிநாய்களுக்கு பலியாகும் ஆடு, கோழிகளால் அதிர்ச்சி
/
வெறிநாய்களுக்கு பலியாகும் ஆடு, கோழிகளால் அதிர்ச்சி
வெறிநாய்களுக்கு பலியாகும் ஆடு, கோழிகளால் அதிர்ச்சி
வெறிநாய்களுக்கு பலியாகும் ஆடு, கோழிகளால் அதிர்ச்சி
ADDED : நவ 22, 2024 01:13 AM
வெறிநாய்களுக்கு பலியாகும்
ஆடு, கோழிகளால் அதிர்ச்சி
புன்செய் புளியம்பட்டி, நவ. 22-
புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆடு வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. சில நாட்களுக்கு முன் புன்செய்புளியம்பட்டி அடுத்த நேருநகர், வடக்கு காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில், வெறிநாய்கள் கடித்ததால், ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறியதாவது: தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள், பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொல்கின்றன. கோழிகளையும் விட்டு வைப்பதில்லை. இறந்து போன ஆடு, கோழிகளை இறைச்சிக்காகவும் பயன்படுத்த முடியாது. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.