/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபால் ரத்னா விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
கோபால் ரத்னா விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 29, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளை ஊக்கப்படுத்த பால் வளம், மீன் வளம், கால்நடை பராமரிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, அதற்கான துறையில் தனி நபர், கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் நிறுவனம், பால் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு 'கோபால் ரத்னா விருது' வழங்கப்படுகிறது.
சிறந்த நாட்டின கறவை பசு வளர்ப்போர், செயற்கை கருவூட்டல் தொழில் நுட்ப வல்லுனர், சிறந்த பால் கூட்டுறவு, பால் உற்பத்தி நிறுவனம், பால் உற்பத்தியாளர் விவசாயிகள் சங்கம் போன்றோர் வரும் செப்., 15க்குள், https://awards.gov.in என்ற இணைய தள வழி விண்ணபிக்கலாம்.

