ADDED : செப் 20, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம், செப். 20-
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்படி மூலனூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்பட, 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை செயலாளர் தில்லையப்பன் தலைமையில், பெண்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.