/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வராண்டாவில் அமர்ந்து சாப்பிடும் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள்
/
வராண்டாவில் அமர்ந்து சாப்பிடும் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள்
வராண்டாவில் அமர்ந்து சாப்பிடும் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள்
வராண்டாவில் அமர்ந்து சாப்பிடும் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூலை 25, 2025 12:46 AM
கோபி, கோபி, பொலவக்காளிபாளையம் அருகே, கல்லங்காட்டு வலசு பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில், 157 குழந்தைகள் படிக்கின்றனர்.
பள்ளி, 1,300 சதுர அடி பரப்பளவில், காலி மைதானம், ஐந்து வகுப்பறைகளை கொண்டுள்ளது. பள்ளியில் காலை உணவு திட்டம், மதிய சத்துணவு திட்டத்தில் குழந்தைகள் அமர்ந்து சாப்பிட உணவுகூடார வசதியின்றி அவதியுறுகின்றனர். வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில், குறுகலான இடத்தில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.
குறுகலான இடம் என்பதால், குழந்தைகளுக்கு உணவு பரிமாறுவதிலும் சிரமம் உள்ளது. பள்ளி வளாகத்தில் போதிய இடவசதி இருப்பதால், உணவு கூடாரம் அமைக்கலாம் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்