/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சட்டசபையை போன்றது கிராமசபை; கலெக்டர் பேச்சு
/
சட்டசபையை போன்றது கிராமசபை; கலெக்டர் பேச்சு
ADDED : அக் 12, 2025 02:00 AM
கோபி:கோபி அருகே ஓடத்துறையில், ஊர்த்தலைவர் சக்திவேல் தலைமையில், கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: இனி வரும் காலங்களில் இளைஞர்கள் கிராம சபை கூட்டங்களில் அதிகளவில் பங்கு பெற்று, பஞ்சாயத்துக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதில் அதிகமான பங்கிருக்க வேண்டும். கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்வதும் ஜனநாயக கடமையில் ஒரு பகுதி. கிராமசபை என்பது சட்டசபை போன்றது. எனவே தவறாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துாய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ், இரு பயனாளிகளுக்கு விதை தொகுப்புகளை வழங்கினார். கவுந்தப்பாடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை
பார்வையிட்டார்.