ADDED : அக் 12, 2025 01:59 AM
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 600 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ, 200, காக்கடா, 150, செண்டுமல்லி, 30, கோழிக்கொண்டை, 65, ஜாதி முல்லை, 500, கனகாம்பரம், 600, சம்பங்கி, 20, அரளி, 40, துளசி, 40, செவ்வந்தி, 120 ரூபாய்க்கும் விற்பனையானது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 35 ரூபாய், நேந்திரன், 21 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 860, தேன்வாழை, 510, பூவன், 490, ரஸ்த்தாளி,
610, மொந்தன், 220, ரொபஸ்டா, 300, பச்சைநாடான், 430 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,620 வாழைத்தார்களும், 7.42 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 20 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தான, 10 ஆயிரத்து, 970 தேங்காய்களும், 3.71 லட்சம் ரூபாய்க்கு விற்றன.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம், நேற்று நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ௫,421 மூட்டைகளில், ௨.௪௪ லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ குறைந்தபட்சம், 2௧௦ ரூபாய், அதிகபட்சம், 22௫ ரூபாய்க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம் கிலோ, 30.39 ரூபாய் முதல் 222.22 ரூபாய் வரை, ௫.௦௮ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.