/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கிரீன் கார்டன் பள்ளி சாதனை
/
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கிரீன் கார்டன் பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கிரீன் கார்டன் பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கிரீன் கார்டன் பள்ளி சாதனை
ADDED : மே 17, 2025 01:15 AM
வெள்ளோடு, சென்னிமலை - பெருந்துறை ஆர்.எஸ்.ரோட்டில் செயல்படும் கிரீன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய, ௭௦ பேரும் தேர்ச்சி பெற்றனர்.
மாணவி ஹர்சிதா, 500க்கு, 495 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி கீர்த்தி, 491 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடமும், பவஹரிணி, 490 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடமும் பெற்றனர். அறிவியலில் ஒன்பது பேரும்,
கணிதத்தில் இருவரும், 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
490 மதிப்பெண்ணுக்கு மேல் மூவரும், 485 மதிப்பெண்ணுக்கு மேல் ஐந்து பேரும், 470 மதிப்பெண்ணுக்கு மேல் 18 பேரும், 450க்கு மேல் 32 பேரும், 400க்கு மேல் 52 பேரும் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர், முதலிடம் பிடித்த மற்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு, கிரீன் கார்டன் பள்ளி தலைவர் மற்றும் இயக்குனர்கள் பாராட்டி பரிசளித்தனர்.