/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை பொது வினியோக திட்டத்தில் குறைதீர் முகாம்
/
நாளை பொது வினியோக திட்டத்தில் குறைதீர் முகாம்
ADDED : நவ 08, 2024 07:30 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம், அனைத்து தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நாளை நடக்கிறது.இதில் புதிய ரேஷன் கார்டு பெறவும், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் இணைத்தல் போன்ற கோரிக்கை மனுக்களை மக்கள் வழங்கி தீர்வு பெறலாம்
ஈரோடு தாலுகாவுக்கு - நசியனுார் பவானி மெயின் ரோடு ரேஷன் கடையில் நடக்கிறது. இதேபோல் பெருந்துறை - ஆயிக்கவுண்டம்பாளையம், மொடக்குறிச்சி - எழுமாத்துார் மெயின் ரோடு கடை, கொடுமுடி - ஊஞ்சலுார், கோபி - கலிங்கியம் அவ்வையார்பாளையம், நம்பியூர் - காவிலிபாளையம், பவானி - கவுந்தப்பாடி கே.வேலாம்பாளையம், அந்தியூர் - அம்மாபேட்டை ஊமாரெட்டியூர், சத்தியமங்கலம் - புங்கார் கராச்சிகோரை, தாளவாடி - ஆசனுார் ரேஷன் கடையிலும் முகாம் நடக்கிறது.

