ADDED : ஜூலை 13, 2026 05:18 AM

ஈரோடு:ஈரோடு
46 புதுார் ஊராட்சி ஏழாவது வார்டு பாலாஜி கார்டன் மற்றும் கலைமகள் நகர்
பகுதியில், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக
குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து
மக்கள் கூறியதாவது:
இப்பகுதியில் நூாற்றுக்கும் மேற்பட்ட
குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சி குடிநீர் முறையாக வினியோகம்
செய்யாததால், போர்வெல் நீரை பயன்படுத்தி வருகிறோம். இரண்டு ஆண்டாக
நீரின் நிறம் மாறி வருகிறது. இதை பயன்படுத்துவதால் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை தோல், எலும்பு பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு
உள்ளாகி வருகிறோம். பெண்களுக்கும் பல்வேறு உபாதை ஏற்பட்டு
தவிக்கின்றனர். நீரின் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை
செய்ததில், கெமிக்கல் கலந்திருப்பதாகவும், பயன்படுத்துவதற்கு
உகந்த நீர் அல்ல என்றும் முடிவு வந்துள்ளது. இது தொடர்பாக பலமுறை
அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. புதிய
அரசு இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறினர்.
