ADDED : மே 12, 2025 03:00 AM
ஈரோடு: குரு பெயர்ச்சியை ஒட்டி, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரை சோழீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 11:00 மணி முதல், 1:30 மணி வரை மூல மந்திர யாகம், அபிஷேக-அலங்கார பூஜை நடந்தது. இதில்லாமல் பரிகார பூஜையும் நடந்தது. இதில் நுாற்றுக்
கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலையில் இன்று...வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் நேற்று மதியம் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் சென்னிமலை மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், குரு தட்சிணாமூர்த்திக்கு இன்று காலை, 8:௦௦ மணிக்கு கலச பூஜை யாக வேள்வி, மஹா பூர்ணாகுதி, அபி-ஷேகம், அலங்காரம் நடக்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வரும், 15ம் தேதி காலை, குருப்பெயர்ச்சி யாக வேள்வி பூஜை நடக்கிறது.
புளியம்பட்டியில்...
புன்செய்புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி சுப்ரமணியர் கோவிலில், குருப்பெயர்ச்சி விழா சிறப்பு யாக வேள்வி நேற்று நடந்தது. இதையடுத்து யாகத்தில் வைக்கப்பட்ட கலச தீர்த்தம் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு குரு பகவா-னுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வகை திரவிய அபி-ஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து, மகாதீபம் காட்டப்-பட்டது. குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, மூலவர் சுப்பிரம-ணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
* கோபி அருகே காசிபாளையத்தில், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சுவாமி கோவிலில், குருப்பெயர்ச்சி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டனர்.