/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் கைவரிசை
/
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் கைவரிசை
ADDED : ஆக 29, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியை அடுத்த தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். 40; புன்செய்புளியம்பட்டியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை ஹோட்டலுக்கு சென்று விட்டு இரவு திரும்பியபோது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து துணிகள் சிதறி கிடந்தன.
தங்க கம்மல், மோதிரம், பிரேஸ்லெட் உள்ளிட்ட மூன்றரை பவுன் நகை, 10 ஆயிரம் இந்திய ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.