ADDED : ஜூலை 18, 2026 06:23 AM
ஈரோடு:தமிழகத்தில் கைத்தறித்துறை உதவி இயக்குனர்கள், 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதன்படி
ஈரோடு சரக உதவி இயக்குனர் பெ.சரவணன் - திருச்செங்கோடு சரகம், கரூர்
சரக உதவி இயக்குனர் அ.பழனிக்குமார் - விருதுநகர் சரகத்துக்கும்
மாற்றப்பட்டனர்.
விருதுநகர் சரக உதவி இயக்குனர் பி.வெங்கடேசலு
- ஈரோடு சரக உதவி இயக்குனராகவும், திண்டுக்கல் சரக உதவி இயக்குனர்
வி.கார்த்திகேயன் - சேலம் உதவி அமலாக்க அலுவலராகவும், சேலம் உதவி
அமலாக்க அலுவலர் எம்.எஸ்.கே.சூர்யா - சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்
கூட்டுறவு சங்க உதவி இயக்குனர் மற்றும் செயலாட்சியராகவும்,
இப்பொறுப்பில் இருந்த சுகன்யா - கரூர் சரக உதவி இயக்குனராகவும்,
திருச்செங்கோடு சரக உதவி இயக்குனர் மற்றும் கோவிந்தன்பாளையம்
விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க செயலாட்சியர் தமிழ்செல்வன் -
வேலுார் சரக உதவி இயக்குனராகவும், வேலுார் சரக உதவி இயக்குனர்
என்.ஸ்ரீவிஜயலட்சுமி - திருச்செங்கோடு உதவி அமலாக்க
அலுவலராகவும், திருச்செங்கோடு உதவி அமலாக்க அலுவலர் ஏ.காமராஜ் -
திருச்செங்கோடு உதவி இயக்குனர் மற்றும் கோவிந்தன்பாளையம்
விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க செயலாட்சியராகவும்,
திருச்செங்கோடு உதவி அமலாக்க அலுவலர் விஜயராணி - ஈரோடு சரக உதவி
இயக்குனர் மற்றும் அசோகபுரம் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க
செயலாட்சியராகவும் மாற்றப்
பட்டுள்ளனர்.
