/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இ.வி.எம்.,கள் ஒப்படைப்பு
/
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இ.வி.எம்.,கள் ஒப்படைப்பு
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இ.வி.எம்.,கள் ஒப்படைப்பு
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இ.வி.எம்.,கள் ஒப்படைப்பு
ADDED : ஜன 14, 2025 02:48 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பயன்-படுத்தப்பட வேண்டிய மின்னணு ஓட்டுப்பதிவு (இ.வி.எம்.,கள்) உள்ளிட்ட இயந்திரங்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்ப-டைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த, 2023ல் இடைத்தேர்தல் நடந்-தபோது பதிவான இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள், மாநக-ராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக இருந்தன. மீண்டும் தொகு-தியில் இடைத்தேர்தல்
அறிவிக்கப்பட்டதால், இயந்திரங்கள் அனைத்தும், தேர்தல் ஆணைய இ.வி.எம்., கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 'பெல்' நிறுவன பொறியாளர்களால் பதி-வுகள் அகற்றி, பழுது நீக்கி, அடுத்த ஓட்டுப்பதிவுக்கு தயார்
செய்-யப்பட்டது. பழுதானவற்றுக்கு புதிய இயந்திரங்கள் தரப்பட்டன. இவற்றில் நேற்று முன்தினம் மாதிரி ஓட்டுப்பதிவு முடிந்தது. இந்-நிலையில் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து இயந்-திரங்களும், தேர்தல் நடத்தும்
அலுவலரான மணீஷிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டன.இதை தொடர்ந்து இ.வி.எம்., கிடங்கில் இருந்து, 284 இ.வி.எம்.,கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபேட் மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்-டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்
முன்னி-லையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாது-காப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், இந்த இயந்திரங்களில் வேட்பாளர்
பெயர், சின்னம் இணைக்கப்-படும். ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளில் அந்தந்த ஓட்டுச்சாவ-டிக்கு எடுத்து செல்லப்படும்.