/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் கொட்டி தீர்த்த கனமழை:வழக்கம்போல் குளமான வீ.சத்திரம்
/
மாநகரில் கொட்டி தீர்த்த கனமழை:வழக்கம்போல் குளமான வீ.சத்திரம்
மாநகரில் கொட்டி தீர்த்த கனமழை:வழக்கம்போல் குளமான வீ.சத்திரம்
மாநகரில் கொட்டி தீர்த்த கனமழை:வழக்கம்போல் குளமான வீ.சத்திரம்
ADDED : செப் 02, 2025 01:21 AM
ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று காலை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் மாலை, 4:௦௦ மணிக்கு, வானம் மேகமூட்டமாகி, 4:10 மணிக்கு மிதமான வேகத்தில் மழை துவங்கியது.
வேகம் குறைவது, அதிகாரிப்பது என மாறி மாறி மழை பெய்தது. பின், 4:35க்கு வேகமெடுத்த மழை, 5:௦௦ மணி வரை அதே ஜோரில் வெளுத்து வாங்கியது. பள்ளி, கல்லுாரி முடிந்து சென்ற மாணவ, மாணவியர் மற்றும் மக்கள் அவதிக்கு ஆளாகினர். வழக்கம்போல் வீரப்பன்சத்திரத்தில் மழை நீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து, சத்தி ரோடு குளமாக மாறியது. குறிப்பாக பாரதி தியேட்டர் பஸ் நிறுத்தம் முதல் முனியப்பன் கோவில் வரை சாலை நீரில் மூழ்கியது. முழங்கால் அளவுக்கு கழிவுநீருடன் தேங்கி நின்ற மழைநீரில் பாதசாரிகள், டூவீலர்களில் தத்தளித்தபடி சென்றனர்.
கொட்டிய மழையால் கொங்கலம்மன் கோவில் வீதி, மீனாட்சி சுந்தரனார் வீதி, ரயில் நிலைய ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரோட்டில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த வேப்பமரம் பக்கவாட்டில் முறிந்து விழுந்தது.
* அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம், இந்திரா நகர், பாறையூர், மறவன் குட்டை, கொல்லபாளையம் உள்ளிட்ட பல இடங்களில், நேற்று மாலை, 4:00 மணி முதல் ௪:௨௦ மணி வரை துாறல் மழை பெய்தது.
* பவானி மற்றும் காடையாம்பட்டி, குருப்பநாயக்கன்பாளையம், ஜீவா நகர், ஊராட்சிக் கோட்டை, மூன்று ரோடு, சங்கர் கவுண்டன்பாளையம், வரதநல்லுார் ஆகிய பகுதிகளில், மாலை, ௪:௪௫ மணிக்கு தொடங்கிய கனமழை, 5:30 மணி வரை கொட்டி தீர்த்தது.