/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை சாலையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்த மாணவியர்
/
ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை சாலையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்த மாணவியர்
ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை சாலையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்த மாணவியர்
ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை சாலையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்த மாணவியர்
ADDED : ஜூலை 17, 2025 01:58 AM
ஈரோடு, ஈரோட்டில் நேற்று மாலை வெளுத்து வாங்கிய மழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலையும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை 4:00 மணியளவில், ஈரோட்டில் திடீரென வானம் மேகமூட்டமாக மாறியது. பின், மிதமான வேகத்தில் மழை பெய்ய தொடங்கியது. அதன்பின் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
பள்ளி,கல்லுாரிகள் முடியும் நேரத்தில் மழை வெளுத்து வாங்கியதால், மாணவ, மாணவியர், மழையில் நனைந்தவாறு சென்றனர். குறிப்பாக, வீரப்பன்சத்திரத்தில், மழை நீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து, சத்தி ரோட்டில் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குபட்டு,
வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அப்பகுதியில் அரசு பள்ளி
யில் படிக்கும் குழந்தைகள், மாணவிகள், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்தனர். சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சாலையை கடக்க முடியாமல் திணறினர். மழையில் நனைந்தபடி, முழங்கால் அளவிற்கு கழிவு
நீருடன் தேங்கி நின்ற மழைநீரில், தத்தளித்தவாறு நடந்து சென்றனர். சைக்கிளில் சென்ற மாணவியர், தேங்கிய மழைநீரின் நடுவில் சிக்கி தவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஒரு மணி நேரம் மட்டுமே இன்று(நேற்று) மழை பெய்தது. இதற்கே சத்தி ரோட்டில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. கேரளாவை போல தொடர் கனமழை பெய்தால், வீடுகளுக்குள் கூட மழைநீர் புகுந்துவிட வாய்ப்புள்ளது. இந்த பகுதி தாழ்வாக இருப்பது தான் மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம். ஒவ்வாரு முறை மழை பெய்யும் போது, குளம் போல் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இதுவரை அதிகாரி
கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் மழை காலத்தை கவனத்தில் வைத்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
இதேபோல, மீனாட்சி சுந்தரனார் சாலை, பழையபாளையம், மணிக்கூண்டு, காந்திஜி ரோடு, ரயில்வே ஸ்டேசன் ரோடு உள்ளிட்ட சாலைகளையும் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதேபோல, மாவட்டத்தின் புறநகர் பகுதி
களிலும் பரவலாக மழை பெய்தது.