/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய தல கண்காட்சி
/
அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய தல கண்காட்சி
ADDED : மே 20, 2025 02:02 AM
ஈரோடு, உலக அருங்காட்சியக தினத்தை ஒட்டி, இந்தியாவின் பாரம்பரிய தலங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சி, ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் நேற்று துவங்கியது.
உலகளவில் யுனெஸ்கோ பாரம்பரிய தலமாக, 1,223 இடங்களை அறிவித்து பாதுகாத்து வருகின்றன. இதில் இந்தியாவில் கலைசார் பாரம்பரிய தலங்கள், 36, இயற்கையான பாரம்பரிய ஏழு தலங்களின் புகைப்படம் காட்சிப்படுத்தபட்டுள்ளது. அதுகுறித்த தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாத இறுதி வரை கண்காட்சி நடக்கும். வெள்ளி, இரண்டாவது சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை, 10:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை அருங்காட்சியகம் செயல்படும். இந்த நாட்களில் கண்காட்சியை பார்வையிடலாம் என காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்துள்ளார். ஏராளமான கல்லுாரி மாணவ, மாணவியர் நேற்று கண்காட்சியை பார்த்து சென்றனர்.