/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைப்பகுதியில் சுற்றுலா விடுதிகளுக்கு அனுமதி உயர்மட்டக்குழு யோசனை
/
மலைப்பகுதியில் சுற்றுலா விடுதிகளுக்கு அனுமதி உயர்மட்டக்குழு யோசனை
மலைப்பகுதியில் சுற்றுலா விடுதிகளுக்கு அனுமதி உயர்மட்டக்குழு யோசனை
மலைப்பகுதியில் சுற்றுலா விடுதிகளுக்கு அனுமதி உயர்மட்டக்குழு யோசனை
ADDED : ஜூன் 03, 2025 01:27 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணி குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஈரோட்டில் நேற்று நடந்தது. கத்திரிமலையில் மின் இணைப்பு வழங்குதல், சாலை தொடர்பு இல்லாத குக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்துதல்,
பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுதல், பர்கூர், தாளவாடி மலைப்பகுதியில் சுற்றுலா விடுதிகளுக்கு உரிய அனுமதி வழங்குதல் உட்பட அனைத்து துறைகளிலும் திட்டங்கள், பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி நிறைவு செய்ய யோசனை தெரிவிக்கப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களை தடுத்தல் சட்டத்தில் குழுக்கள் அமைத்தல் குறித்து யோசனை தெரிவிக்கப்பட்டது.