/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உயர்கல்வி சேர்க்கை குறைதீர் முகாம்; நாளை நடக்கிறது
/
உயர்கல்வி சேர்க்கை குறைதீர் முகாம்; நாளை நடக்கிறது
உயர்கல்வி சேர்க்கை குறைதீர் முகாம்; நாளை நடக்கிறது
உயர்கல்வி சேர்க்கை குறைதீர் முகாம்; நாளை நடக்கிறது
ADDED : ஜூன் 22, 2025 01:19 AM
ஈரோடு, அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை சிறப்பு குறைதீர் முகாம், ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நாளை மதியம், 2:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது.
உயர் கல்வி சேரும் மாணவர்கள், பெற்றோர் இல்லாதவர், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ளவர், இலங்கை தமிழர் முகாம்களில் வாழும் மாணவர்கள், உயர் கல்விக்கு பெற்றோர் விருப்பமின்மை, சமூக காரணம், முதல் தலைமுறை பட்டதாரி, ஜாதி சான்று, வருமான சான்று பெறுவதில் பிரச்னை, குடும்ப சூழலால் வேலைக்கு செல்வோர் முகாமில் பங்கேற்று தீர்வு பெறலாம். வங்கி கடன் தேவைப்படுவோர், நலவாரிய விடுதிகளில் சேர்க்கை தேவைப்படுவோர், சலுகை பெறுதல் போன்றவற்றுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
தவிர கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உயர் கல்வி வழிகாட்டு கட்டுப்பாட்டு அறையை, 0424 2260999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் விபரம் பெறலாம்.