/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
14ல் மலைப்பாதை திறப்பு; பா.ஜ., அறிவிப்பு சுதாரிக்குமா மலை கோவில் நிர்வாகம்?

ADDED : அக் 08, 2025 01:15 AM
சென்னிமலை சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல, ௪ கி.மீ., துாரத்துக்கு தார்ச்சாலை உள்ளது. பல ஆண்டுகளானதால் சேதமானது. மேலும் மழை காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை மண் திட்டுகளாக மாறியது.
வாகனங்களில் செல்ல முடியாமல் பக்தர்கள் சிரமப்பட்டனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, 7 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை சீரமைப்பு பணி, 2024 ஜூலை மாதம் தொடங்கியது.
மலைப்பாதையின் இருபுறமும் வடிகால் அமைத்தல், 13 சிறு பாலங்கள் அமைக்கும் பணி முடிந்த நிலையில், 24 அடி அகலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணியும் நிறைவடைந்தது.
தற்போது பாலம் மற்றும் பக்கவாட்டு சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஆனாலும் மலைப்பாதையை பயன்பாட்டுக்கு விடுவ
து தொடர்பாக, கோவில் நிர்வாக தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் வரும், 14ம் தேதிக்குள் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இல்லையேல் திருப்பூர் தெற்கு, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், 14ம் தேதி காலை 'சாலையை திறக்கும் விழா' நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கும் அக்கட்சி தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.