/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரடு முரடான சாலையால் மலை கிராம மக்கள் அவதி
/
கரடு முரடான சாலையால் மலை கிராம மக்கள் அவதி
ADDED : செப் 23, 2024 04:16 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் யூனியன் கடம்பூர் மலை குன்றி ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தில், 6,௦௦௦ மக்கள் வசிக்கின்றனர். கடம்பூரிலிருந்து, 16 கி.மீ., தொலைவில் குன்றி மலை கிராமம் உள்ளது.
இதில் கடம்பூரிலிருந்து அஞ்சனைபிரிவு வரை சாலை நன்றாக உள்ளது. மாமரத்துபள்ளம் முதல் குன்றி வரை, 10 கி.மீ., துார சாலை சேதமாகி கரடு, முரடாக உள்ளது. இதனால் டூவீலரில் செல்வதே கடும் சவாலாக உள்ளது. சாலையை சீரமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியதாவது: நாங்கள் கடைக்கோடி மலை கிராமத்தில் உள்ளோம். எங்களுக்கு அடிப்படை வசதிகளில் மிக முக்கியமானது சாலை வசதி தான். ஆனால் ஓராண்டு காலமாக, சாலை சேதமாகி மிக மோசமான நிலையில் உள்ளது. சாதாரண காலங்களில் ஊர்ந்து கொண்டுதான் போக முடியும்.
மழை காலங்களில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சேறு, சகதியாக இருக்கும். தார்ச்சாலை அமைத்தால் மூன்று மாதங்கள் கூட தாக்கு பிடிக்காது. ஒரே மழையில் அடித்து சென்று விடும். கான்கிரீட் சாலை அமைத்தால் மட்டுமே மழை பெய்தாலும் கரையாது. நாங்களும் பல முறை அதிகாரிகளிடத்தில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இவ்வாறு கூறினர்.