sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தார்ச்சாலை - பஸ் வசதி வேண்டி மலைப்பகுதி மக்கள் முறையீடு

/

தார்ச்சாலை - பஸ் வசதி வேண்டி மலைப்பகுதி மக்கள் முறையீடு

தார்ச்சாலை - பஸ் வசதி வேண்டி மலைப்பகுதி மக்கள் முறையீடு

தார்ச்சாலை - பஸ் வசதி வேண்டி மலைப்பகுதி மக்கள் முறையீடு


ADDED : செப் 09, 2025 01:48 AM

Google News

ADDED : செப் 09, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கடம்பூர் மலை, டி.ஜி.புதுாரில் வசிக்கும், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:

குத்தியாலத்துார் பஞ்., உகினியம் கிராமத்தில், 125க்கும் மேற்பட்ட ஊராளி பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இக்கிராமம் வன செட்டில்மென்ட் கிராமம். இக்கிராமத்தில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில் கரளயம் கிராமம் உள்ளது. இக்கிராம மக்கள் தங்கள் கல்வி, மருத்துவம் என அனைத்துக்கும், கரளயம் செல்ல வேண்டும்.

ஆனால் கரளயம் செல்ல தார்சாலையை அடைய, அடர்ந்த வனப்பகுதி, ஆபத்தான பகுதியை கடந்து, 4 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும். இந்த இணைப்பு சாலை தார்ச்சாலையாக இருந்தது. தற்போது சேதமாகி டூவீலர்கள் கூட செல்ல முடியாதபடி உள்ளது. எனவே உகினியம் - கரளயம் செல்லும், 4 கி.மீ., வனச்சாலையை புதுப்பித்து, கரளயம் வழியாக செல்லும் அரசு பஸ்களை உகினியம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us