/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருப்பதியின் புனிதத்தை கெடுக்க சதி இந்து முன்னணி தலைவர் குற்றச்சாட்டு

ADDED : செப் 22, 2024 04:12 AM
தாராபுரம்: தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி கோவிலில் நடந்து வரும் கும்பாபிஷேக பணியை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் செந்தில்குமார், கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
நிருபர்களிடம் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: ஆந்திராவில் கடந்த ஆட்சியில் கிறிஸ்தவர் முதல்வராக இருந்தார். அப்போது திருப்பதி கோவிலில், விலங்கு கொழுப்பு கலந்த லட்டு வழங்கப்பட்டதை, தற்போதைய முதல்வர் வெளியிட்டுள்ளார். தமிழகத்திலும் கூட பழனி பிரசாதத்தில் கலப்படம் உள்ளதாக, சில மடாதிபதிகள் கூறியுள்ளனர். நீதிமன்றங்கள் கூறியபடி, கோவில்களில் தரப்படும் பிரசாதங்களை ஆய்வு செய்ய வேண்டும். கோவில்களின் புனிதத்தை கெடுக்க நாத்திகவாதிகளும், நக்சலைட்டுகளும் சதி செய்கின்றனர். அவர்களை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கு, இங்கு குறைகளை கூறும் உரிமை உள்ளது. ஆனால், வெளிநாட்டில் இந்தியாவை பற்றி கூறுவதை, இந்து முன்னணி கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.